திருமாவளவனின் இரட்டை வேடம்! அதிர்ச்சி தகவல்!!

விசிக திருமாவளவன் கருத்து குறித்து, மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன், “சகோதரர் திருமாவளவன் மனநிலையும், சுயரூபமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சனாதன தர்ம எதிர்ப்பு என பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆனால், தேர்தல் வந்ததும் சிதம்பரத்தில் பக்தி பரவச வேடம் போட துவங்கினார். நடிப்பில் கமலையும் மிஞ்சிவிட்டார். ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணம் காங்கிரஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என கூறினார்.

ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்தையும் அடியோடு மறந்து ராகுலை பிரதமர் ஆக்குவதுதான் எனது முதல் வேலை என கூறுகிறார், தமிழர்களுக்காக கண்ணீர் சிந்துவது கூறினார், ஆனால் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் கையாலேயே பரிசு வாங்கினார். தான் சார்ந்த சமூகத்திற்காக பாடுபடுவதாக கூறினார் ஆனால், அவர்களுக்காக அவர் துரும்பை கூட அசைக்கவில்லை என்பதே உண்மை” என தெரிவித்துள்ளார்.