அமெரிக்காவில் இளைஞரை துப்பாக்கியால் சுட முயன்ற இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஆன்னிஷா ஸ்பீட் என்கிற 19 வயது இளம்பெண், தன்னுடைய ஆண் நண்பர் ஒருவரின் அறைக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பெண், தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு அந்த பெண் கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு இளைஞர் மறுப்பு தெரிவித்ததால், திடீரென ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து இளைஞரின் நெற்றியில் வைத்துள்ளார்.
அதனை பார்த்து பயந்துபோன இளைஞர், அந்த பெண்ணின் கைகளை மடக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சுவற்றை துளைக்க ஆரம்பித்துள்ளது.
ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாத அந்த இளைஞர், இரண்டாவது மாடியின் பால்கனியில் இருந்து குதித்துள்ளார்.
இதற்கிடையில் துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலாளி உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், தாக்குதல் நடத்த முயன்ற இளம்பெண்ணை கைது செய்தனர்.
பின்னர் துப்பாக்கி குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் திருடியிருப்பது தெரியவந்துள்ளது.