சேலம் ஈரோடு ரயில் வழித்தடங்களில் ரயில் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலைகாரர்களை பிடிக்க திட்டமிட்டனர். இது நடைமுறைபடுத்தப்பட்டது.
இந்த தேடலில் வடமாநில திருடர்கள் 4 பேரை போலீசார் ஈரோடு ரயில் நிலையம் அருகே உள்ள சிக்னலில் மடக்கி கைது செய்தனர். அந்தத் திருடர்கள் அனைவரும், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் சேர்ந்தவர்கள் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கும்பலுக்கு பாலாஜி சங்கர் என்பவர் தலைவனாக செயல்பட்டுள்ளான்.
மேலும், தானாஜி மன்மத், சுனில் மன்மத், பப்பு ஈஸ்வர் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். இந்த திருட்டு கும்பல் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்தால் 100 சவரன் நகையுடன் தான் திரும்பி செல்வார்களாம். இவர்களிடம் இருந்து சுமார் 53 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
இவர்கள் மெதுவாக செல்லும் ரயில்களை தேர்ந்தெடுத்து ஜன்னல் அருகே இருக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குடும்பமாக சென்றதனால் இந்த திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் மிகவும் சிரமப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.