மேல் மாகாண உளவுத்துறையின் தகவல்களுக்கு அமைய ஹொரவ்பொத்தானை பொலிசாரால் கைது செய்யப்பட்டு 72 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தனர்.
21/4 தொடர் குண்டுத் தாக்குதல்தாரிகளுடன் நேரடித் தொடர்பினை கொண்டிருந்ததாக கூறப்படும் இரு பாடசாலை அதிபர்களையும் இம்மாதம் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட உளவுத்துறையினர் இனி வரும் நாட்களில் பல முக்கிய பதவிகளில் இருப்பவர்களை கைது செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் விரைவில் பல புத்திஜீவிகள் கைது செய்யப்படுவர் எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி குறிப்பிட்டார்.