தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரேயா ரஜினி உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். ஆனால், சில காலமாக பல புதுமுகங்கள் அறிமுகத்தால் ஸ்ரேயா திரையுலகில் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், இவர் இறுதியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நரகாசூரன்’ என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கின்றது.
இதனை தொடர்ந்து தற்போது நகைச்சுவை கலந்த ஹீரோயிசத்தை வெளிப்படுத்தி பெண்களின் மனதை கொள்ளை கொண்ட பிரபல நடிகர் விமலுடன் இணைந்து ‘சண்டக்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த சண்டைக்காரி படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்பொழுது நிறைவடைந்துள்ளது. மேலும், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கிராமம் சார்ந்த பகுதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.