கிரிக்கெட் தொடரில் விளையாடி கொண்டிருந்த பிரபல வீரர்: உயிரிழந்த அவரின் மகள்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஆசிப் அலியின் மகள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா (2). பாத்திமா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.

புற்றுநோயானது 4வது கட்டத்தை எட்டி விட்டதால், நூர் பாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதே சமயத்தில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆசிப் அலி விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி பாத்திமா உயிரிழந்தார். மகள் உயிரிழந்த தகவல் ஆசிப் அலிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பியுள்ளார்.