உங்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன் என கணவரிடம் நேரடியாக கூறிய இளம்மனைவி…

தமிழகத்தில் மனைவியின் கழுத்து பகுதியில் 10ற்கும் மேற்பட்ட முறை வெட்டி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (31). இவர் மனைவி கஸ்தூரி (28). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கஸ்தூரிக்கும், கோவிந்தராஜின் தம்பி சின்னசாமி (29) என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கோவிந்தராஜ் அவர்களை கண்டித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஸ்தூரியும், சின்னசாமியும் தனிமையில் இருந்ததை கோவிந்தராஜ் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஆனாலும் தான் தவறு செய்யவில்லை என கஸ்தூரி மறுத்தார்.

நேற்று காலை இது குறித்து கோவிந்தராஜ் மீண்டும் கஸ்தூரியிடம் கேட்ட போது உண்மையை அவர் ஒத்து கொண்டார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், வீட்டிலிருந்த கத்தியால் கஸ்தூரியின் கழுத்து பகுதியில் 10ற்கும் மேற்பட்ட முறை வெட்டியுள்ளார்.

தாக்குதலை எதிர்பார்த்து காத்திருந்த மனைவி கஸ்தூரி வெட்டுவதை எதிர்க்காமல் அப்படியே இருந்துள்ளார்.

பாதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் அப்படியே நிலை குலைந்து கிழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இச்சம்பவத்தை அருகே இருந்த அவரது இரண்டு மகன்களும் நேரடியாக பார்த்துள்ளனர்.

இதன்பிறகு கோவிந்தராஜ் நேராக காவல் நிலையத்துக்கு சென்று தான் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.

இதையடுத்து கோவிந்தராஜை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.