ஒருவருக்கு போட்ட ஊசியை மாற்றாமல் கிராம மக்களுக்கு உபயோகம் செய்த மருத்துவர்.!

இந்த உலகில் நாம் மருத்துவரை கடவுளுக்கு சமமாக பார்த்து வருகிறோம். நமது உடல் நலத்தில் ஏதேனும் குறை ஏற்பட்டால்., உடனடியாக மருத்துவரை சென்று ஆலோசித்து தேவையான மருந்துகளை எடுத்து வருகிறோம். அதனைப்போன்று பல இளம் உயிர்கள் விபத்துகள் அல்லது பிற காரணத்தால் இறக்கும் தருவாயில் இருக்கும் சமயத்தில்., உடனடியாக செயல்பட்டு அவர்களின் உயிரை காத்து வருகின்றனர்.

அவ்வாறு மருத்துவ துறையில் இருக்கும் பல மருத்துவர்கள்., அவர்களின் குணங்களால் பல மக்களின் மனதில் இடம் பெற்று வரும் இந்த சூழலில்., நோயாளிகளுக்கு உடல் நலக்குறைவின் போது செலுத்தப்படும் ஊசியை மாற்றாமல் சுமார் 530 பேருக்கு ஊசி போட்டதில்., சுமார் 530 பேர் எச்.ஐ.வி தாக்கத்திற்கு உள்ளாகிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நாம் மருத்துவமனைக்கு சென்று வரும் சமயத்தில் அரசு மருத்துவமனையில் ஊசிகளை வாங்கி வருமாறு மருத்துவர்கள் சில நேரம் ஆலோசனை செய்து., நாம் ஊசிகளை வாங்கி சென்ற பின்னர் நமக்கு ஊசிகளை போடுவார்கள். இந்த நிலையில்., ஒரு நோயாளிக்கு மருந்து செலுத்தப்பட்ட ஊசியை., பிற நோய்களிகளுக்கும் பயன்படுத்தியதன் விளைவாக சுமார் 530 பேருக்கு எச்.ஐ.வி தொற்றானது ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்தி மாகாணத்தில் வஸாயே என்ற கிராமமானது உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அடிக்கடி உடல் நலக்குறைவின் மூலமாக அவதியுற்று வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும்., அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று இரத்த பரிசோதனை செய்து கொண்டனர்.

அந்த சமயத்தில் அக்கிராமத்தில் இருக்கும் நபர்களில் சுமார் 530 பேருக்கு எச்.ஐ.வி நோய் தொற்றானது இருப்பது தெரியவந்தது. இதுமலட்டுமல்லாது இந்த எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில்., சுமார் 400 நபர்கள் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலானது கிடைத்தது. இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையின் முடிவில். அதே பகுதியில் மருத்துவமனை வைத்து நடத்தும் நபரின் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து அந்த மருத்துவமனையை நடத்தி வரும் முசாபர் கங்கர் என்ற நபரை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., ஒரு நபருக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது பணத்தை சேமிப்பதற்காக ஊசியை மாற்றாமல் பயன்படுத்தி வந்ததும்., அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பதும் தெரியவந்தது.

மருத்துவரின் அலட்சியம் மற்றும் ஆசையின் காரணமாக கிராம மக்கள் மற்றும் ஒன்றும் அறியாத குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியிருக்கும் செய்தியானது அங்குள்ள பகுதியில் வெளியானதை தொடர்ந்து பெரும் அதிர்ச்சி உண்டாகவே., வேகமாக எச்.ஐ.வி பரவி வரும் நாடுகளின் பட்டியலில் பாகிஸதான் நாடானது இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் ஐக்கிய நடுகல் சபையானது அறிவித்துள்ளது.