இது தான் எனக்கு கஷ்டமான விஷயம்!! மனம் திறந்த காஜல்!!

பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ படத்திலும் அவர் நடித்து வருகின்றார். இந்நிலையில், தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை காஜல் அகர்வால் , “நான் 15 ஆண்டுகளாக நான் திரைத்துறையில் நடித்து கொண்டு இருக்கிறேன்.

இவ்வளவு நீண்ட என் சினிமா பயணத்தில் நான் நடித்த கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் பல எனது மனதை தொட்டு இருக்கின்றன. பொதுவாக நான் கதை கேட்கும்போதே அந்த கதாபாத்திரத்தில் என்னை கற்பனை செய்து ஆரம்பித்துவிடுவேன்.

அதன்பின்னர், அந்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலிருந்தும் வெளியே வர முடியாத நிலையில் தான் இருப்பேன். என்னுடைய வீட்டுக்கு வந்தால் கூட நான் அந்த கதாபாத்திரத்தோடு வாழ்கிறமாதிரி தான் எனக்கு தோன்றும். ஆனால், இப்போது அதில் இருந்து விடுபட சற்று பழகி விட்டேன்.

நடிகர்கள் நடித்த அப்படி வெளிவராவிட்டால் புதிய படங்களில் நடிப்பது கடினமாகிவிடும். நான் நடிப்பதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.