மென்மையான குளிர்காற்று… அரியமான் கடற்கரை..!!

ராமேஸ்வரத்திலிருந்து ஏறத்தாழ 29கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து ஏறத்தாழ 146கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஓர் அழகிய இடம்தான் அரியமான் கடற்கரை.

சிறப்புகள் :

சுற்றுலா வருவதை மட்டுமே பொழுதுப்போக்காக கொண்டிருக்கும் ராமேஸ்வரம் பகுதி மக்களில் பெரும்பாலானோர் அடிக்கடி வந்து செல்லும் கடற்கரையாக இது உள்ளது.

உண்மையில், அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் தங்களுடைய வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான மக்கள் வரும் கடற்கரையாகவும் அரியமான் கடற்கரை உள்ளது.

நீலக்கடல் நீர் மின்னுவதாகவும், நாள் முழுவதும் அமைதியாகவும் இருக்கக்கூடிய அழகிய கடற்கரைதான் இது.

நாள் முழுவதும் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரை சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.

அரியமான் கடற்கரை சுத்தமான கடல் தண்ணீர் மற்றும் அழகான மணலாலும் சுற்றுலா பயணிகளை ஒவ்வொரு நாளும் வரவேற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் குழந்தைகளுக்கு பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி, நீர்ச்சறுக்கு மற்றும் இதர விளையாட்டுகளையும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடற்கரையின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் சவுக்கு மரங்கள் கோடையின் வெப்பத்தில் இருந்து சுற்றுலா பயணிகளை பாதுகாக்கிறது. இம்மர நிழல்களில் அமர்ந்து கடலின் அழகையும், குளிர்ந்த தென்றலையும் அனுபவிக்கலாம்.

சுற்றுலா செல்பவர்களின் சுற்றுப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிடவே இந்த வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.