முக்கிய சாலையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நபர்!

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் முக்கிய சாலை ஒன்றில் நபர் ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெர்ன் மண்டலத்தின் Nidau பகுதியில் திங்களன்று இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. சுமார் 3.48 மணியளவில் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் Nidau புறநகர் பகுதியில், முக்கிய சாலையில் தீக்காயங்களுடன் நபர் ஒருவரை மீட்டுள்ளனர்.

குற்றுயிராக கிடந்த அந்த நபரை மீட்டு உடனடியாக முதலுதவி அளித்துள்ளனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் அந்த நபர் ஆபத்து கட்டத்தை இதுவரை தாண்டவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

முக்கிய சாலையில் நபர் ஒருவர் தீக்கிரையானதாக வெளியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.