ஆபாச நடன மங்கையாக இருந்து பின்னர் சிறைக்காவலரான ஒரு பெண் தனது பாதுகாவலிலிருந்த கைதியுடன் பழகி கர்ப்பமுற்றிருக்கிறார்.
10 வாரங்கள் கர்ப்பிணியாக இருக்கும் டொராண்டோவைச் சேர்ந்த சுக்பிரீத் சிங் (24) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதற்கு காரணம் தனது காதலனான Tatum Ogden (32) என்னும் கொள்ளையனை ஒரு முறை தனது தாயின் ஜீப்பை பயன்படுத்தி காப்பாற்றியிருக்கிறார், இன்னொரு முறை தனது பொலிஸ் பதவியை பயன்படுத்தி பொய் சொல்லி காப்பாற்றியிருக்கிறார்.
Ogden சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அந்த சிறையின் காவலராக இருந்த சுக்பிரீத் சிங்கிற்கும் Ogdenக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முதலில் Ogden தனக்கு தொலைபேசியில் அழைத்து தொந்தரவு கொடுப்பதாக தனது மேல் அதிகாரிகளிடம் புகாரளித்த சுக்பிரீத் சிங், பின்னர் அவரிடம் நெருங்கிப் பழகியிருக்கிறார்.
ஒரு குற்றவாளியிடம் அளவு மீறி பழகியதற்காக அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்.
குற்றம் செய்வதையே தொழிலாக கொண்ட Ogden மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சுக்பிரீத் சிங் ஒரு குத்துச்சண்டை வீரரும் கூட, தனது குத்துச் சண்டை பயிற்சியாளரின் மகனை திருமணம் செய்திருந்த அவர், கடந்த ஆண்டு தனது கணவரை பிரிந்தது குறிப்பிடத்தக்கது.