சமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை! காரணம்??

சாப்பாடு மீது அதீத காதல் எல்லோருக்கும் இருக்கும். எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய கால கட்டத்தில் எல்லோருக்குமே உள்ளது தான்.

நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிடவது நமது அடிப்படை உரிமை, அது தான் நியாமான சுதந்திரம் கூட. ஆனால், உலக அளவில் சில நாடுகளில் இந்த உணவை சாப்பிட கூடாது என்கிற மோசமான வரையறைகள் உள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகள் மூட நம்பிக்கையின் பெயர்களிலும், ஆரோக்கியமற்ற உணவுகள் என்பதன் அடிப்படையிலும் சில நாடுகளில் பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டே உள்ளது.

இதே போன்று தான் சோமாலியா நாட்டிலும் இந்தியாவின் பாரம்பரிய உணவான சமோசாவும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான உண்மை காரணத்தை தெரிந்து கொண்டால் நீங்களே அதிர்ச்சி அடைவீர்கள். ஏன் சோமாலியா நாட்டில் சமோசாவை தடை செய்துள்ளனர்? இதன் பின் இருக்கும் உண்மை காரணம் என்ன? வேறு எந்தெந்த நாடுகளில் இது போன்ற தடை செய்யப்பட்ட உணவுகள் உள்ளது. முதலிய பல சுவாரசிய தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

சமோசா

சோமாலியா நாட்டில் சமோசா விற்பதும், சாப்பிடுவதும் மிக பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இதுவும் ஒரு மதத்தின் அடிப்படையில் தான் தடை செய்யப்பட்டுள்ளது. சோமாலியா நாட்டில் இந்த முக்கோண வடிவம் கிறிஸ்துவ மதத்தை குறிப்பதால் இதை 2011 ஆம் ஆண்டு முதல் தடை செய்து வருகின்றனர்.

பால்

அமெரிக்கா போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்படாத பாலை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, பச்சை பாலை அங்கு விற்க கூடாது என சுமார் 22 மாகாணங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தக்காளி

சாஸ் பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடும் போது டொமட்டோ சாஸ் தான். ஆனால், இந்த நிலை தான் பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் அங்கு படிக்கும் போது பள்ளி குழந்தைகள் இந்த தக்காளி சாஸை பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கு மூல காரணம் குழந்தைகளுக்கு இது ஒவ்வாமை ஏற்படுத்துகிறது என்பதால் மட்டுமே.

குதிரை இறைச்சி

லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் குதிரை இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குதிரையை கொல்வதும் அதன் இறைச்சியை விற்பதும், வாங்குவதும் மிக பெரிய அளவில் குற்றமாக கருதப்படுகிறது.

சுவிங் கம்

சிங்கப்பூரில் சுவிங் கம் சாப்பிடுவது ஒரு குற்றமாகவே பார்க்கப்படுகிறது. இதை விற்கவும் வாங்கவும் மிக பெரிய அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு முதல் இந்த தடை நீடித்து வருகிறது.