திருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு!

பிரித்தானியாவின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் திருமணமான 16-வது நாளில் கணவரை புற்றுநோயால் இழந்த இளம்பெண் ஒருவர் தமது வலியை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் குடியிருக்கும் பெக்கா தாமஸ், தமது கணவரை முதன் முறையாக தேநீர் விடுதி ஒன்றில் வைத்து சந்தித்துள்ளார்.

அப்போதே இருவரும் நல்ல நண்பர்களாக மாறியுள்ளனர். பின்னர் தாமஸின் நண்பர் ஒருவரின் இசை நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாக சென்றுள்ளனர்.

அந்த ஒருநாளில் பெக்கா தமது வாழ்க்கைத்துணையை தெரிவு செய்ததாக கூறியுள்ளார். இதனிடையே தாமஸ் தமது நிலையை பெக்காவிடம் தெரிவிக்க, வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் நாட்களை ஒன்றாக வாழ்வோம் என பெக்கா உறுதி அளித்துள்ளார்.

இதனிடையே தாமஸ் தமக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ளதை, அன்றாடம் தனது நிகழ்வுகளை இணையத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.

தாமசுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் அவரது சமூக வலைத்தள பக்கத்தை பிந்தொடர்ந்துள்ளனர்.

பலருக்கும் ஊக்கம் அளிப்பதாக இருந்துள்ளது தாமசின் வார்த்தைகள். இருப்பினும் பலரும் தாமசுக்கு ஆதரவளித்து வந்துள்ளனர்.

மட்டுமின்றி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் Oleg Atemyev என்பவரிடம் இருந்து தாமசுக்கு ஆதரவு செய்தி வந்துள்ளது.

இந்த நிலையில் பெக்காவும் தாமசும் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் திகதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

தாமஸ் தமது காதலை தெரிவித்து, திருமணம் செய்து கொள்வாயா என கேட்டு ஒரு வாரத்தில் இருவரும் முடிவு செய்ததாக பெக்கா தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்த சில நாட்களில் தாமசின் நிலை கவலைக்கிடமானது. மருத்துவ சேவையை அவரது உடல் ஏற்றுக்கொள்ள முடியாத கட்டத்திற்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 28 ஆம் திகதி டான் தாமஸ் மருத்துவமனை படுக்கையில் மரணமடைந்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொண்ட 16-வது நாள் தாமஸ் மரணமடைந்துள்ளார்.