இரத்தினபுரி – கரன்னகொட பகுதியில் விஷ வாயு தாக்குதலுக்கு உள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மாணிக்கக்கல் அகழ்வதற்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்த நபரொருவரை காப்பாற்ற முயற்சித்த போதே குறித்த நபர் இவ்வாறு விஷ வாயு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
கரன்னகொட பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
இதனுடன் குழிக்குள் தவறி விழுந்து படுகாயங்களுக்கு உள்ளான நபர், தற்போது இரத்தினபுரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.