ஒடிசாவை சேர்ந்தவர் தடகள வீராங்கனை டுட்டி சந்த். ஆண்மைத் தன்மை இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடகள போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.
ஆனால் பல சோதனைகளுக்கு பிறகு, கடந்த 2015 ஆம் ஆண்டு டுட்டிக்கு விதிக்கப்பட்ட தடை தகர்க்கப்பட்டு அவர் மீண்டும் போட்டிகளில் களமிறங்கினார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று இரு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டுட்டி அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது டுட்டி இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது காதலுக்கு அவரது சகோதரி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த டுட்டியின் தாயார் அக்கோஜி கூறுகையில், எனது மகள் எனது பேத்தியை காதலிக்கிறார். அதாவது மகள் முறையில் உள்ளவரையே காதலிக்கிறார். ஒரு தாய் எப்படி மகளை திருமணம் செய்து கொள்ள முடியும்.
இதுகுறித்து கேட்டால் இரு பெண்கள் திருமணம் செய்துகொள்ள சட்டமே உள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் ஒரு போதும் என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.