மாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருந்து வரும் நிலையில் அவர்களுக்கு மீண்டும் எப்போது பள்ளி திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை திறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக கோடை விடுமுறை அதிகப்படியான வெப்பத்தினால் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதிகப்படியான வெப்பத்தினால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதனால் கோடை விடுமுறை நீட்டித்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வருடம் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே வந்ததால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை முடித்து ஏறக்குறைய ஐம்பது நாட்களுக்கு மேல் நீண்ட விடுமுறையை தமிழக அரசு அறிவித்து இருந்தது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள், இதர பொருட்களை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதனமைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளிக்கு மாணவர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, ஆகையால் கோடை வெயிலில் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்கம் என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.