பெண்ணிற்கு நேர்ந்த கொடூர சம்பவம்!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இருக்கின்றது. அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான இடம் ஒன்று இருக்கின்றது. அங்கு புதர் மண்டி கிடக்கும். அந்த புதரில் ஒரு பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது.

அங்கு அந்த பெண்ணின் செருப்பும் கிடந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை அவர் நடந்த சிலர் பெண்ணின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து மன்னார்குடி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தடையங்களை பரிசோதனை செய்தனர்.

அதன் பின்னர் திருவாரூரிலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடி பண மரத்தை சுற்றி வந்து நின்றது. அங்கே அந்த பெண்ணின் மற்றொரு செருப்பு கிடந்தது. சடலத்தை பார்க்கும் பொழுது பெண் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.

அந்தப் பெண்ணை கொலை செய்து விட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு முப்பதிலிருந்து நாற்பது வயது இருக்கலாம் என தெரிகிறது.

கொலை செய்யப்பட்ட பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? யார்? என்பது குறித்து விபரம் ஏதும் தெரியவில்லை இதற்கிடையே பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஏதேனும் கள்ளக்காதல் விவகாரமா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.