சர்வதேச தினங்கள் கொண்டாடப்படுவது குறித்த விடயத்தை மக்களுக்குத் தெளி வுபடுத்தல், அதன் முக்கியத்துவத்தைப் புலப்படுத்தல், அதன்பால் கவனயீர்ப்பை ஏற்படுத்தல் என்பனவாகும். இதனடிப்படையில் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
மனித உயிர்கள், சொத்துக்களை அழித் தல் மற்றும் மனித நேயத்திற்கு எதிரான அனைத்து செயற்பாடுகளும் பயங்கரவா தமாகும். இது மனித உருவாக்கத்தில் இருந்து ஆரம்பமானாலும் இன்று உலகில் மிகவும் உக்கிரமடைந்துள்ளது ஏனெனில் அன்றைய பயங்கரவாதம் பொறாமை, வஞ்சகம், மதவெறி, கோபம் மற்றும் மனித நேயமற்ற தன்மையாலும் ஏற்பட்டது. ஆனால் இன்று இவற்றுக்கும் அப்பால் பல காரணிகள் சேர்ந்து பயங்கரவாதம் உக்கிரமடைந்துள்ளது.
பயங்கரவாதத்தை எந்த மதமும் ஆதரிக்கவில்லை. மாறாக எதிர்க்கின்றது. மேலும் மனித நேயமுள்ளவர்கள் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபடவும் மாட்டார்கள் அதற்கு ஆதரவு வழங்குவும் மாட்டார்கள் மாறாக அதனை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள். இன்று பயங்கரவாதம் பல கோண ங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. சில பல மிக்க நாடுகள் உலகில் தமது ஆதிக்கம் தொடர வேண்டும் என்பதற்காக பலம் குன்றிய நாடுகளில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்கின்றன. அதே போன்று சில நாடுகள் தமது ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதற்காக பயங்கரவாதத்திற்கு ஊக்கமளிக்கின்றன. மேலும் மதவாதம், அரசியல் என்பவற்றுக்காகவும் பயங்கரவாதம் ஏற்படுத்தப்படுகின்றது. பயங்கரவாதம் எந்த வழியிலோ வடிவிலோ வந்தாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்கள் என்பது உலகறிந்த விட யம். இதற்காகத்தான் ஐக்கியநாடுகள் சபை மக்களுக்கு தெளிவுபடுத்தவும் பயங்கரவாதத்தில் சிக்காமல் தடுப்பதற்காகவும், உல கில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவும் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு தினத்தை ஏற்படுத்தியது.
இன்று உலகில் பயங்கரவாதம் இல்லாத நாடுகள் மிகமிகக் குறைவு. அந்த வகையில் பயங்கரவாதத்தால் பாதிப்படைந்த நாடுகளில் இலங்கையும் அடங்கும் 30 வருட யுத்தத்தில் இருந்து விடுபட்டு 10 வருடங் கள் நிம்மதியாக வாழ்ந்த இலங்கை மக் கள் சர்வதேச பயங்கரவாதத்தால் கடந்த 2019.04.21 ஆம் திகதி மீண்டும் பயங்கரவாத பாதிப்பை எதிர் நோக்கினர். ஒரு தூய மதத்தின் பெயரை போர்வையாக ஆக்கிக் கொண்ட ஒரு குழுவினர் சகோதர மதத்தினரை அவர்களின் வழிபாட்டுத் தலத்தில் வைத்து அவர்களின் புனித நாளான உயிர் த்த ஞாயிறு அன்று மேற்கொண்ட தாக்குதல் மற்றும் உல்லாச உணவக விடுதிக ளில் மேற்கொண்ட தாக்குதல் மிகவும் மிலேச்சத்தனமானதாகும். இதனால் ஏறக்குறைய 250அப்பாவி மக்கள் உயிரிழந்ததுடன் சுமார் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர். இந்த செயற்பாட்டை இலங்கை வாழ் முஸ்லிம்கள் அன்றி உலக முஸ்லிம்களும் வெறுத்தனர். இதனை உண்மைப்படுத்தும் முகமாக இலங்கை முஸ்லிம்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு அரச படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதற்கு சிறந்த உதாரணம் பயங்கரவாதிகள் சாய்ந்தமருதில் தங்கியிருந்த இடத்தினை படையினருக்கு அறிவித்து 2019.04.26 ஆம் திகதி பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன் அதில் பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான ஒரு சூழலில் மேலும் ஒரு பயங்கரவாதத்தை 2019.05.13 ஆம் திகதி பெரும்பான்மை பௌத்த மக்களின் ஒரு குழுவினர் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தி முஸ்லிம்களின் சொத்துக்கள், மதஸ்தலங் கள் என்பவற்றை அழித்தனர். இதன் பின்ன ணியில் மதப் பயங்கரவாதம், அரசியல் பயங்கரவாதம் என்பன காணப்படுகின்றன. இதன் மூலம் பயங்கரவாதம் ஆதரவளிக்கப்படுகின்றதே ஒழிய அழிக்கப்படவில்லை. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு குழுவினர் சகோதர மத கிறிஸ்தவ மக்களை தாக்கிய போதும் அம்மக்கள் பொறுமை காத்து நாட்டில் ஒரு இன பயங்கரவாதத்தை ஏற்படுத்தாமல் சமாதானத்திற்கு ஆதரவளித்து பயங்கரவாதத்திற்கு தமது எதிர்ப்பினை காட்டினர். இச் செயற்பாடானது மிகச் சிறந்த மனித நேயத்தை உலகுக்கு காண்பித்தது. இந்த வகையில் கிறிஸ்தவ மதத்தின் தலைவர்களும், மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
ஆனாலும் மிகத் துயரமான விடயம் என்னவென்றால் முஸ்லிம்களின் புனிதமான ரமழான் மாதத்தில் பெரும்பான்மை பௌத்த மக்களின் ஒரு குழுவினர் முஸ்லி ம்களை கஷ்டத்திற்கு உள்ளாக்குவது மிக வும் வேதனையான விடயமாகும். இவ் விடயத்தில் அரசாங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு தினத்தில் உலகில் ஒவ்வொரு பிரஜையும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் அது எந்த சமயத்திலோ, மதத்திலோ, கட்சியிலோ, இயக்கத்திலோ இருந்து தோன்றினாலும் அவை தண்டிக்கப்பட வேண்டும். விசேடமாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பயங்கரவாத எதிர்ப்புக்காக அரசினால் அமுல்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும். ஊரடங்குச் சட்டம், அவசரகாலச் சட்டம் போன்றவற்றுக்கு மதிப்பளித்து மக்கள் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். அதே போன்று மேற்படி சட்டங்கள் அமுலில் உள்ள போது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் அனைவரையும் மத, இன தராதரம் பாராமல் தண்டிக்க வேண்டியது அரச படையின் பொறுப்பாகும். மாறாக பாராமுகமாக இருத்தல் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகும். இவ்வாறே அரசியல் வாதிகள், மத போதகர்கள் இன முரண்பாடான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மதங்களுக்கிடையே வன்முறைகள் ஏற்படுத்தப்பட்டு பயங்கரவாதச் செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படும்.
பயங்கரவாதத்தை தூண்டும் வேலை களை தற்போது சமூக வலைத்தளங்களில் சில மேற்கொண்டு வருகின்றன. இதனால் இலங்கையில் பாரிய இன வன்முறைகளை நாம் அனுபவித்து வருகின்றோம். இச் செயற்பாடானது பயங்கரவாதத்திற்கு வழிகோறக் கூடியதாகும். அதே போன்று சில ஊடகங்கள் ஊடக தர்மங்களை மீறி தமது பிரபல்யத்திற்காக பயங்கரவாதச் செயற்பாட்டின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புக்களை அடிக்கடி மக்களிடையே ஒளி, ஒலி பரப்பி சாதாரண மக்களின் மனங்களில் பயங்கரவாத உணர்வுகளை ஏற்படுத்தி பயங்கரவாதத்திற்கு துணை புரிகின்றன. இவ்வாறு இல்லாமல் மக்களுக்கு உரிய முறையில் தகவல்களை வழங்கி பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஊடகங்கள் செயற்பட வேண்டும்
இவ்வாண்டின் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு தினத்தில் இவ் உலகம் விசேடமாக இலங்கை பயங்கரவாதம் அற்ற ஒரு சுவர்க்க பூங்காவாக மிளிர வேண்டும். இதற்காக மேற்கூறிய அனைவரும் இதய சுத்தியுடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை அழித்து சமாதானத்தை ஆதரிப்போம். இதற்கு எல்லோருக்கும் பொதுவான இறை வன் துணை புரிய வேண்டும்.
(ஒருவரை வாழ வைத்தவன் உலகையே வாழ வைத்தவன் ஆவான்)
ஒலுவில் இஸட்.ஏ.றஹ்மான்