இந்த உலகில் உள்ள அனைத்து திரையுலகில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள்., அதனைப்போன்று திரையுலகில் உள்ள பிற பிரபலங்கள் காதல் ரீதியிலான சில பிரச்சனைகளில் சிக்குவது உண்டு. இந்த சமயத்தில் சில நடிகைகள் வெளிப்படையாக நான் இவரை காதலிக்கிறேன் என்று தெரிவிப்பதும் வழக்கம்.
அனைத்து நாடுகளின் ரசிகர்களால் விரும்பப்படும் பாப் பாடல்களின் பாடகியாக திகழ்ந்து வருபவர் 26 வயதுடைய பாடகி செலீனா கோம்ஸ். இவர் பாப் பாடல்களின் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து கொண்டு., இணையத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார்.
இவர் இவரை போன்ற பல பாப் பாடல் பாடும் நபர்களை காதலித்து வருவதாக பல வதந்திகள் கிளம்பி வந்த நிலையில்., தற்போது அவர் தெரிவித்த கருத்தானது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் பாதித்துள்ளது.
ஹாலிவுட் துறையில் பிரபல நடிகராக வளம் வந்தவர் 68 வயதுடைய பில் முர்ரே. இவரை பாப் பாடகியான செலீனா கோம்ஸ் காதலித்து வருவதாகவும்., அவரையே விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்ட இவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்து வரும் நிலையில்., இந்த தகவலானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.