வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வேளாண்மை, வனச் சூழல், பேரிடர் மேலாண்மை ஆகிய பயன்பாட்டுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ ரிசார்ட் – 2 பி செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தியது.

இந்த ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது 615 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது விண்ணில்557 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.