கணவனின் கண் முன்னரே மனைவியை கடத்தி சென்ற கும்பல்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை மருதூர்குறிச்சி பகுதியை சார்ந்தவர் கேன்ஸ் (வயது 35). இவர் கேரள மாநிலத்தில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் மிஸ்பா. இவர்கள் இருவருக்கும் சாயல் மற்றும் ஜெர் சித் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில்., நேற்று கணவன் மற்றும் மனைவி இருவரும் இல்லத்தில் இருந்த சமயத்தில்., இவர்களின் இல்லத்தின் வாயிலில் சுமார் ஆறு பேர் கொண்ட கும்பலானது மோட்டார் வாகனம் மற்றும் ஆட்டோவில் விரைந்து வந்து இறங்கியுள்ளனர்.

இவர்களை கண்டு பதறிப்போன கணவன் மற்றும் மனைவி சுதாரிப்பதற்குள்., வீட்டிற்குள் இருந்த மிஸ்பாவை அனைவரும் சேர்ந்து கடத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில்., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கேன்ஸ்., தனது மோட்டார் வாகனத்தில் இவர்களை விரட்டியுள்ளார்.

அந்த சமயத்தில்., இவரை இடைமறித்த இவர்களின் கும்பல் அடித்து தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே., அவர் தக்கலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர்., சம்பவ இடத்திற்கு விரைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்துவிட்டு., பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.