அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அரச சேவையாளர்களுக்கான மாதாந்த இடைக்கால கொடுப்பனவு 2500 ரூபாவை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2019 க்கான வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு அமைவாகவே இது வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றுநிரூபத்தை திரைசேரியின்யின் அனுமதியுடன் அரச நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சகல அமைச்சுகளினதும் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இடைகால கொடுப்பனவு 2500 ரூபாவுடன் அரச சேவையாளர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவுகள் 7800 ரூபாவையும்