மீண்டும் பொன்பரப்பி விவகாரம்!! கடுப்பான நீதிபதிகள்….

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில், உள்ள பொன்பரப்பி என்ற கிராமத்தில் இருந்த வாக்குச்சாவடியில் வன்முறை சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்தது.

இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தொகுதி வாக்காளர் விஷ்ணு ராஜ் என்பவர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கூறி மனுவைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், ‘சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி வாக்குச்சாவடியில் தேர்தல் தினத்தன்று வன்முறை ஏவப்பட்டது.

இதன் காரணமாக 275 பேர் வாக்களிக்க முடியாமல் போனது. எனவே, அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். விஷ்ணுராஜின் இந்த மனுவை நீதிபதிகள் அறிவித்தனர். ஆனால், இந்த தொகுதிக்கு மறுவாக்குபதிவுக்கு உத்தரவிட மறுத்தனர்.

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மறுவாக்குப்பதிவிற்கான உத்தரவை எப்படி வழங்க முடியும் என கேள்வி எழுப்பினர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இந்த வழக்கினை தேர்தல் வழக்காக தொடரும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.