உயிருக்கு போராடிய நிலையில் ஏரிக்கரையில் கிடந்த குடும்பம்.!

திருவண்ணாமலை பெரணமல்லூர் பகுதியில் இமாபுரம் கிராமத்த்தில் வசித்து வருபவர் சீனு. இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு பிரதி ஸ்ரீ, திவ்யதர்ஷினி, ரித்திக் ரோஷன் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் லாரிவாங்குவதற்காக சிலரிடம் சீனு கடன் வாங்கியிருந்தார்.ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் சரியான நேரத்தில் கட்டமுடியாத நிலையில், பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு அடிக்கடி தொல்லைபடுத்திவந்துள்ளனர். இதனால் சீனு மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடன் தொல்லையை சமாளிக்க முடியாத சீனு, தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு பக்கத்து கிராமத்தில் உள்ள தெள்ளாரம்பட்டு ஏரிப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து மனைவி மற்றும் மகளுக்கு கொடுத்து விட்டு அவரும் குடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பிறகு அனைவரும் ஏரிக்கரையில் மயங்கி விழுந்துள்ளனர்.

இந்நிலையில் ஏரிப்பகுதிக்கு 100 நாள் வேலைக்காக வந்த கிராம மக்கள் அங்கு மயங்கிக் கிடந்த அனைவரையும் கண்டு பெரும்அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மனைவி லட்சுமி மற்றும் மகன் ரித்திக் ரோஷன் ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மேலும் சீனு, பிரதிஸ்ரீ, திவ்யதர்ஷினி ஆகிய 3 பேரும் மிகவும் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.