தனது காதல் குறித்து உண்மையை கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.!

இயக்குனர் அர்ஜுன் காமராஜ் இயக்கத்தில், திரையுலக பிரபலங்களான ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு மற்றும் பிளேடு ஷங்கர், முனிஷ்காந்த ஆகியோர் நடித்து வெளிவந்த கனா படத்தின் மூலம் பிரபலமானார். இப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் தேடி வருகின்றன.

கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தது போல, இந்தப் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தெரிவித்துள்ளார். தனது கிராமத்தினரின் கனவை நனவாக்க மல்யுத்த வீராங்கனையாக களமிறங்கும் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக உள்ளார். தற்போது இதற்காக மல்யுத்த பயிற்சி எடுத்து வருகிறார்.

தற்போது எஸ்கே 16 படத்தில் நடித்து வருகின்றார். அவர் ஒரு பிரபலத்தை காதலிப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து அவரே தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னுடைய சக நடிகர்கள் யாருடனும் நான் காதலிக்கவில்லை. எனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது. யாரையும் காதலிக்க எனக்கு நேரமில்லை. என் மனதிற்கு பிடித்த நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.