பெண் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!!

வாகாவிற்கு செல்லும் விமானத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஸ்லாட்டர் கிளம்பியுள்ளார். அப்போது, அவர் விமானத்தில் பயணம் செய்த பெண் பயணிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் வாக்குவாதம் மிக அதிகமாக நடக்கவே விமானத்தின் கழிவறைக்கு சென்ற அவர் வெகு நேரமாகியும் வெளிவரவில்லை. விமான ஊழியர்கள் அவரை தேடி சென்று அங்கிருந்து வெளியேறச் சொன்னார்கள். ஆனால், அவர் மறுத்து விட்டார். இதனையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு பின்னர் அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்த சம்பவத்தால் விமானம் புறப்பட சுமார் 30 நிமிடங்கள் தாமதமானது. இதனை தொடர்ந்து மற்ற ஊழியர்கள் சிலர் பயணிக்க மறுத்துள்ளனர். இதனால், அவர் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார்.

இது தொடர்பாக அவர், “என்னால் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டு இருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்” என கூறியுள்ளார். தற்போது நடக்கவிருக்கும் உலக கோப்பை போட்டியில் வர்ணனையாளராக இவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.