முகநூல் நட்பு., நாடகக்காதல் மூலமாக சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த கொடூரன்.!

இந்த உலகம் முழுவதிலுமே பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதி சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பெண்களுக்கு தெரியாத நபர்களை விட நன்றாக தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே அவ்வாறான பாலியல் தொல்லைகள் வழங்கப்பட்டு வருகிறது என்ற செய்தியானது பெரும் தாக்கத்தை நம்மிடையே பதிவு செய்கிறது

இந்த நிலையில்., இந்த பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க., இணைய வாழ்க்கையில் வாழ்ந்து வரும் பலர்., இணையத்தின் மூலமாக அவர்களின் வாழ்க்கையை அழித்துள்ள சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. முகநூலின் மூலமாக ஒன்றும் அறியாத 15 வயதுடைய சிறுமியின் வாழ்க்கையானது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள சம்பவமானது பெரும் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தை சார்ந்தவர் ஸ்டீபன் பிரட்லீ. அதே பகுதியை சார்ந்த மற்றொரு சிறுமி முகநூலின் மூலமாக இவருடன் நட்பு வட்டாரத்தில் பழகி வந்த நிலையில்., சிறுமியின் மனதை மயக்குவதற்க்காக அவருக்கு தேவையான பரிசு பொருட்கள் மற்றும் ஆடைகளை வழங்கி., காதல் வலையில் விழ வைத்துள்ளான்.

இந்த நிலையில்., சிறுமிக்கு விமானத்தில் அழைத்து செல்வதாக ஆசை வார்த்தை கூறி., விமானத்தில் சென்ற சமயத்தில் பாலியல் சீண்டலை செய்துள்ளான். இந்த நிலையில்., வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த அநீதியை கூறி கதறியளவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.