திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாடி பகுதியை சார்ந்தவர் பிரசன்னா (வயது 42)., இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் நித்தியகமலா (வயது 32). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டின் இருவரும் மூன்று வருடங்களில் பிரிந்துள்ளனர்.
இந்த நேரத்தில்., இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையான லத்திகா ஸ்ரீயை அழைத்து மகளுடன் தனியாக வசித்து வரும் நிலையில்., இவர்களின் விவாகரத்து வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில்., அதே பகுதியை சார்ந்த ஆசிரியரான முத்துபாண்டியுடன் (வயது 35) பழக்கம் ஏற்பட்டுள்ளது. முத்துபாண்டிக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் மற்றும் மனைவி உள்ளார்.
முத்துப்பாண்டி மதுரையில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில்., அதே பகுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வந்துள்ளனர். அந்த வாடகை வீட்டின் உரிமையாளரிடம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பணி கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த நேரத்தில்., நேற்று முன்தினத்தன்று மாலை உடலில் பலத்த காயத்துடன் லத்திகா ஸ்ரீயை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நித்தியகமலா., மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்., அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் கூறியதை அடுத்து., மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., வேறு வேறு காரணத்தை கூறி வந்த நிலையில்., தற்போது குற்றவாளிகளின் வாக்குமூலமானது வெளியாகியுள்ள நிலையில்., பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் – மனைவியாக இருவரும் வாழ்ந்து வரும் நிலையில்., மகள் இல்லத்தில் இருக்கும் சமயத்திலேயே இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., இவர்கள் இருவரும் அரைகுறை ஆடையுடன் உல்லாசமாக இருப்பதை லத்திகா ஸ்ரீ கண்டுகொள்ளவே., இதனை தனது தாயாரிடம் நீங்கள் ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனை கேட்ட நித்தியகமலா., தனது மகளை அடித்து உதைத்து தொலைக்காட்சியை பார்த்து கொண்டு இரு என்று அடித்து அனுப்பியுள்ளார்.
இதனால் சிறுமி அழுதுகொண்டு இருக்கவே., இருவரும் சேர்ந்து அவரை அடித்து துன்புறுத்தியதில் அவர் படுகாயமடைந்து மயக்கமடைந்துள்ளார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர்., நிதியாகமாலாவிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில்., முதல் கணவரான ப்ரசன்னாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் இருந்த முத்துபாண்டியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.