மயிலாடுதுறை அருகே உள்ள விவசாய நிலங்கள் பயிர்செய்யப்பட்டுள்ளன. அந்த பயிர்செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்குள் குழாய் பதிப்பதற்கு கெயில் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பூச்சி மருந்து பாட்டிலுடன் வயலில் இறங்கி போரட்டம் செய்கின்றனர்.
கெயில் நிறுவனம் நாகை மாவட்டத்தில் இருந்து 29 கி.மீ தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள முக்கறும்பூர் என்ற கிராமத்தில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.
கெயில் நிறுவனம் அந்த வயல்களில் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பூச்சிமருந்து பாட்டில்களுடன் அந்த பகுதியின் விவசாயிகள், வயல்களில் இறங்கி கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழக அரசு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுக்க வேண்டும். அவ்வாறு தடுத்து நிறுத்தாவிட்டால் விஷம் குடித்து வயலிலேயே தற்கொலை செய்து கொள்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.