தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்துள்ளது என குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஷ்டீரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாகா, “பாஜக தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு குழப்பத்தை உருவாக்கி வருகிறது. மக்களின் மனநிலையை மாற்றும் விளையாட்டுகளை பாஜக செய்யும் என்பது எங்களுக்கு தெரியும்.
பாஜக மீது மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கின்றனர். ஒருபோதும் மக்கள் பாஜகவை ஆதரிக்கமாட்டார்கள். ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடந்துள்ளது. அறிவிப்பில்லாமல் ஓட்டு எந்திரங்கள் அங்குமிங்கும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல் அறையில் இருந்தேல்லாம் ஓட்டு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதெல்லாம் சந்தேகத்தை எழுப்புகிறது. மக்களின் உரிமையை பறிக்கும் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் தொண்டர்கள் மோசடி நடக்காமல் தடுக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஆயுதங்களை கையில் எடுப்பார்கள். தில்லுமுல்லு நடந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் நிலை நிச்சயமாக ஏற்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.