மூன்றாவது திருமணத்திற்கு தயாரான அவெஞ்சர்ஸ் பட நடிகை.!

ஹாலிவுட்டில் வெளியாகி இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அவெஞ்சர்ஸ். இப்படத்தின் இறுதிகட்டம் சமீபத்தில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என வெளியானது.

இந்த படத்தில் என்ற ப்ளாக் விடோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்கார்லெட் ஜோஹான்சன். அவெஞ்சர் திரைப்படத்தில் மிக திறமையாக நடித்த இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.மேலும் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தில் பிளாக் விடோ மற்றும் அயன் மேன் 2 இறப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன், டிவி நடிகர் கோலின் ஜோன்ஸ் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகை கோலின் ஜோன்ஸ், ரியான் ரொனாட்ஸ்என்பவரை காதலித்து கடந்த 2008ல் திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதனை தொடர்ந்து அவர் 2011ஆம் ஆண்டு ரொமான் பாரிக் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது,

இதனை தொடர்ந்து சில காலங்கள் திரைப்படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்த ஸ்கார்லெட் ஜோஹான்சன் அவெஞ்சர்ஸ் படத்திலும் நடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது டிவி நடிகர் கோலின் ஜோன்ஸ் என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.