ரணிலின் அதிரடி ; அடுத்தடுத்து குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்!

இலங்கையிலுள்ள சகல வீதிகளுக்கும் பெயர் சூட்டும்போது நாட்டின் சட்டத்திற்குட்பட்டு மும்மொழிகளிலுமே பெயர் சூட்டப்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேறு எந்தவொரு மொழியிலும் பெயர் சூட்டப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் அமுல்ப்படுத்தப்படவேண்டுமென உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தனவிற்கு இது குறித்து பிரதமர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் சில வீதிகளில் சீன மொழி மற்றும் அரபு மொழி என்பன பெயரிடப்பட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.