தமிழ் சினிமாவில் மனதை திருடிவிட்டாய் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன்.அதனை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஸ்ரீ போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ்கடலுக்குள் நீச்சலடிக்கும் ஸ்கூபா டைவிங் கற்று பயிற்சியாளராக பணியாற்றினார்.இந்நிலையில் அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கிய காயத்ரி ஜெயராமன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ரீ படம் குறித்து பேசுகையில், ஸ்ரீ படத்தில் எனக்கு இயக்குனர் சொன்ன கதை ஒன்று. படமாக்கியது ஒன்று. நான் அந்த படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வருவேன். என் வாழ்க்கையிலேயே நான் செய்த பெரிய தவறு ஸ்ரீ படத்தில் நடித்தது தான் என கூறியுள்ளார்.