அதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்திரம்..?

நாளை நடக்கும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கழக முகவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது உங்களுக்கு தெரிந்த பின் தான் ஊடகத்தின் மூலம் மற்ற அனைவருக்கும் தெரியவரும். ஆகவே தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் பாக்கியத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.

வாக்கு எண்ணிக்கையின் போது நீங்கள் மதிநுட்பத்துடன் செயல்பட வேண்டும். பொதுவாக 22 வாக்கு எண்ணிக்கை சுற்றிலும், சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு சுற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். வாக்கு எண்ணுமிடத்திற்கு அதிகாலை 6 மணிக்கே தயாராக இருக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை இடத்தில் பல்வேறு சோதனைகள் செய்வார்கள். அதற்கு ஏற்றாற்போல் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக வாக்கு எந்திரம் சீலிடப்பட்டு உள்ளதா? அதேபோல் சீல் உடைத்த பின் அந்த எந்திரத்திற்கு உட்பட்ட மொத்த வாக்குகளை குறிப்பெடுத்து கொள்ள வேண்டும்.

அதேபோல் தேர்தல் அதிகாரி நம்மிடம் ஒவ்வொரு சின்னத்துக்கான முடிவுகளை காண்பிப்பார்கள்.

இதில் யாராவது ஒருவர் பார்க்க தவறி விட்டால் மீண்டும் அந்த அதிகாரியிடம் கேட்டால் நிச்சயம் உங்களுக்கு காண்பிப்பார்கள்.

அதேபோல் வாக்கு எந்திரம் சம்பந்தமாகவும் மேலும் உங்களுக்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் தவறு நடைபெற்றால் உடனடியாக எழுத்துப்பூர்வமாக அங்கு இருக்கும் தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.