ரஷ்யாவில் பெண் நீதிபதியின் ஐபோனை மர்ம நபர்கள் ஹேக் செய்து அவருடைய நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் இரினா தேவயெவா.
இவருடைய நிர்வாண புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் மர்ம நபர்களால் ஹேக் செய்து வெளியிடப்பட்டது.
இந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதி இரினா தேவயெவா தன்னுடைய பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.
இவருடைய புகைப்படம் வெளியானதற்கும் கடந்த ஆண்டு, ஒரு வழக்கில் இரண்டு பெண்களை விடுதலை செய்ததற்கும் தொடர்பு இருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அரசாங்கத்தை அகற்றுவதற்காக ஒரு தீவிரவாதக் குழுவை உருவாக்கியதாக, 18 வயதான அன்னா பாவ்லிகோவா மற்றும் 19 வயதான மரியா டுபோவிக் ஆகியோருடன் சேர்த்து 8 பேர் கடந்த மார்ச் 2018ம் கைது செய்யப்பட்டனர்.
அதில் மரியா டுபோவிக் மற்றும் அன்னா பாவ்லிகோவா ஆகியோரின் உடல்நலக்குறைவு காரணமாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்கள் விடுதலை செய்ததற்காக இரினாவை பலரும் சமூகவலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்தனர். தற்போது இரினாவின் புகைப்படம் வெளியானது இதன் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.