கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் நேரு (மே 23) நாடு முழுவதும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதில் இந்திய அளவில் 350 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சி 92இடங்களிலும், பிற கட்சிகள் 100இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பெரும்பான்மையான வெற்றியுடன் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது. இதனால் பாஜக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தனது மகன் மாபெரும் வெற்றிவாகையை சூடிய நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசித்து வரும் மோடியின் தாயார் பெரும் உற்சாகம் அடைந்துள்ளார். மேலும் தனது மகனை வெற்றிபெற்ற வைத்த அனைவருக்கும் நன்றி கூறும்வகையில் நடக்கமுடியாத நிலையிலும்,தள்ளாடிக்கொண்டே தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே வந்து இரு கைகளையும் கும்பிட்டு நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது தன் மகனின் வெற்றியை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.