என் பொண்டாட்டி கூட எனக்கு ஓட்டு போடல சார்… குமுறி அழும் வேட்பாளரின் பரிதாப வீடியோ

இந்தியாவில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நபர் என் மனைவி கூட எனக்கு ஓட்டு போடவில்லை என்று குமுறி அழும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் நீது சட்டர்ன் வாலா என்பவர் சுயட்சையாக போட்டியிட்டுள்ளார்.

தோல்வியடைந்தாலும் கூட அதிக வாக்குகள் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த இவருக்கு, நேற்று நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

ஏனெனில் இவர் வெறும் 5 வாக்குகள் மட்டும் பெற்றிருந்தார். இதனால் மிகுந்த சோகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த அவரிடம் அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி எடுத்தார்.

அப்போது அவர், எனக்கு வெறும் 5 ஓட்டுகள் மட்டுமே விழுந்துள்ளது. எனது குடும்பத்திலேயே 9 ஓட்டுகள் உள்ளன.அப்படி இருக்கும் போது,எனக்கு எப்படி 5 ஓட்டுகள் மட்டும் விழும் என்று வேதனையில் கூறிக் கொண்டிருந்தார்.

உடனே அவரை மறித்த பத்திரிகையாளர்கள் உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட உங்களுக்கு ஓட்டு போடாமல் இருந்திருக்கலாம் என கூறினார்கள். உடனே கதறி அழ தொடங்கிய அவர் நான் தேர்தலில் வெற்றி பெற கூடாது என்ற காரணத்திற்காக செய்யப்பட்ட சதி.

இதனால் நான் இனிமேல் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று கண்கலங்க கூறியுள்ளார்.