70 வயது மூதாட்டி அடித்துக் கொலை ; பேத்தி உட்பட நால்வர் கைது!

இந்தியவின் திருவாரூர் மன்னார்குடியில் வயோதிப பெண்ணொருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டரை பவுண் நகைக்காக வயோதிபப் பெண்ணை அடித்துக் கொன்று உடலை பெற்றோல் ஊற்றி எரித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் வயோதிபப் பெண்ணின் பேத்தி உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நியூ பைபாஸ் வீதியின் அருகே கருவேலமர புதருக்குள் வயோதிப பெண் ஒருவர் மருமமான முறையில் தீ வைத்து எரிந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிப பெண் யார் என அறிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். பொலிஸாரின் இந்தக் கொலை வழக்கில் இரண்டரை பவுண் நகைக்காக வயோதிப பெண்ணை அடித்துக் கொலைசெய்து உடலை எரித்த கொடூரம் வெளியானது.

தஞ்சை மாவட்டம் மதுக்கூரையடுத்து, புனவஞ்சிக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் வயது 70 இவர் கடந்த 18 ஆம் திகதி மன்னார்குடி மதுக்கூர் வீதியிலுள்ள தனது 20 வயதுள்ள பேத்தியாரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் பின் அவரின் சொந்தவூருக்குத் திரும்பவில்லை.

இந் நிலையிலேயே அவர் புதருக்கள் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இறந்த வயோதிப பெண்ணான மாரியம்மாளின் பேத்தி சுமதியின் கணவர் ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்கள் சிவக்குமார், பெரியசாமி ஆகியோர் மோட்டார் சைக்களில் வயோதிப பெண்ணான மாரியம்மாளை குறித்த புதருக்குள் அழைத்துச் சென்று, அங்கு வைத்து கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர்.

பின்னர் அவரது கழுத்திலுந்த இரண்டரை பவுண் சங்கிலியை எடுத்துவிட்டு, பனை மரவோலை மற்றும் பெற்றோல் ஊற்றி மாரியம்மாளின் உடலை எரித்துள்ளனர். இந்தக் கொலைக்கு மாரியம்மாளின் பேத்தி சுமதியும் உடந்தையாக இருந்தது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சுமதி உட்பட நான்கு பேரையும் பொலிஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.