பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய மர்ம நபரின் சிசிடிவி புகைப்படத்தை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில், பார்சல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 8 வயது சிறுமி உட்பட, 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொலிஸார் வெளியிட்டு தகவலின் படி, சந்தேகிக்கப்படும் நபர் மிகவும் அமைதியான முறையில் தலையில் தொப்பி மற்றும் கருப்பு நிறத்திலான கண்ணாடி அணிந்திருந்துள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் ஒரு ஐரோப்பிய அல்லது வட ஆபிரிக்க ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.