வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வவுனியா பொலிஸார் இன்று விஷேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.
அவரச காலச்சட்டத்திற்கு அமைவாக வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட வியாபார நிலையங்களில் பணிபுரியும் உரிமையாளர்கள், ஊழியர்களின் விபரப் படிவத்தினை பூரணப்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்குள் வர்த்தகர் சங்கத்தின் அலுவலகத்தில் அதனைக் கையளிக்குமாறு வவுனியா பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வி. எச். ஸ்ரீ. சம்பத் பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.