ராணியை சந்திக்க வரும் அமெரிக்க அதிபரை புறக்கணிக்க காத்திருக்கும் மேகன்!

ராணியை சந்திப்பதற்காக தன்னுடைய மனைவியுடன் பிரித்தானியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை, இளவரசி மேகன் புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய மனைவியுடன் 3 நாள் சுற்றுப்பயணமாக, பிரித்தானியாவிற்கு வருகை தர உள்ளார்.

இதனை பக்கிங்காம் அரண்மனை இன்று உறுதி செய்துள்ளது. 3ம் திகதியன்று காலையில் ராணி, இளவரசர் சார்லஸ் மற்றும் கேமில்லா ஆகியோர், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அவர்களை வரவேற்பார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிய உணவு நேரத்தில் ராணி மற்றும் இளவரசர் ஹரி, அதிபரை சந்திக்க உள்ளனர். ஆனால் இந்த விருந்து நேரத்தில் இளவரசி மேகன், தன்னுடைய குழந்தை ஆர்ச்சியுடன் வீட்டில் நேரத்தை செலவழிப்பதோடு, அதிபருடனான மோசமான சந்திப்பை தவிர்க்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க நடிகையாக இருந்த மேகன், டெனால்ட் ட்ரம்பிற்கு எதிராகவும், ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தார்.

இதுகுறித்து அப்போது பேசிய அவர், நான் ஹிலாரி கிளின்டனுக்கு தான் வாக்களிக்க போகிறேன். அவர் ஒரு பெண் என்பதற்காக மட்டுமில்லை. ஆனால் ட்ரம்ப் ஒரு பிரிவினைவாதி, தவறான சிந்தனையாளர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.