தமது மதம் சாராத ஏனையவர்களை அழிக்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையில் செயற்படும் 30 முதல் 40 ஆயிரம் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குள் உள்ளனர். இன்று இவர்களின் மூலமாக அச்சுறுத்தல் இல்லாது போனாலும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார்.
மக்கள் விரும்பாவிட்டாலும் கூட தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவசரகால சட்டத்தை ஏற்றுத்தான் ஆகவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்று நாட்டின் நெருக்கடியை அடுத்து அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மக்களின் ஜனநாயக செயற்பாடுகளுக்கும் பாதுகாப்புதரப்பின் செயற்பாடுகளுக்கும் இடையிலான சமனிலை தன்மையை உருவாக்க முடியாது என்ற கேள்வி உள்ளது.
ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் மக்கள் தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும். தேடுதல், விசாரணைகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கியாக வேண்டும். சிரியாவிற்கும் ஈராக்கிற்கும் சம்பந்தமே இல்லாத எமது கிறிஸ்தவ மக்களை கொலைசெய்ய எடுத்த முயற்சிகளும் இதற்கு பின்னரும் நடக்குமா என்ற சந்தேகும் ஏன் எடுக்கப்பட்டது.
இந்த இஸ்லாமிய அமைப்பு தாம் ஒரு இனம் தான் இந்த உலகின் மக்கள் என்ற கொள்கையில் நாடளாவிய ரீதியில் இவர்கள் பரவி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும். பலவீனமான நாடுகளில் உள்நுழைந்து தமது பிராந்தியங்களை உருவாக்க முடியும் என்ற நோக்கம் அவர்களுக்கு உள்ளது.
இந்த நோக்கத்தில் தான் உலக நாடுகளுக்கு பயணம் செய்து எல்லா நாடுகளிலும் பயங்கரவாத தாக்குதலைகளை நடத்துகின்றனர். குழுவாக அல்லாது தனி நபராக தன்னை தற்கொலை தாரியாக மாற்றிக்கொள்கிறனர். எந்த வகையிலேனும் கொலை செய்யவேண்டும் அதன் மூலம் இஸ்லாமிய தேசம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும்.
இந்த பயங்கரவாதத்தை அழிப்பதில் பாதுகாப்பு தரப்பின் செயற்பாடுகள் மூலமாக மட்டுமே நிறுத்த முடியாது. இந்த நாட்டில் தவ்ஹித் சிந்தனையில் இருந்து இந்த நாட்டில் கொலைகளை செய்யும் ஒரு தரப்பு உள்ளது. அதேபோல் ஆயிரம் இரண்டாயிரம் பேர் கல்வியை பெற்று பின்னணியில் இருந்து பயங்கரவாதத்தை பலப்படுத்தும் தரப்பும் இலங்கையில் உள்ளது.
இவர்கள் இந்த பாராளுமன்றத்திலும் இருந்துள்ளனர். அதேபோல் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடாதபோதிலும் கூட தமது மதம் சார்ந்தவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் மத சார்பில்லாதவர் என்ற கருத்தையும் இதனால் அவர்களை அழிக்கும் கொள்கையில் உள்ள 30, -40 ஆயிரம் பேர் உள்ளனர்.
அதேபோல் இலங்கையர் என்ற உணர்வு இல்லாத அராபிய கொள்கையில் உள்ளவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தவிர்த்து இலங்கையில் முஸ்லிம்களாக அதேபோல் ஏனைய மத இனத்தவரை அங்கீகரித்து அவர்களுடன் அமைதியா வாழும் முஸ்லிம்களும் உள்ளனர்.
இவ்வாறு ஐந்து பிரதான பிரிவாக உள்ளனர். இவர்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இதில் அச்சுறுத்தலான பிரிவுகளை இல்லாதொழிக்க வேண்டும். இன்று அச்சுறுத்தல் இல்லாதுபோனாலும் கூட எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம். இந்த நாட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இதில் சகல தரப்பும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.-