நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் ஐம்பத்திரண்டு இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது. அதுவும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே 50 சதவீத தொகுதிகளை பெற்றுள்ளது.
இந்த மிகப்பெரிய தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆனது ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தன்னுடைய ராஜினாமா முடிவை தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருடைய ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் செயற்குழுவில் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலானோர் ராகுல் காந்தியே தலைவராக தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.