வெளியுறவுத்துறை அமைச்சகம் அடுத்த 6 மாதங்களுக்கான பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத் திட்டத்தை அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக 300 ற்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. இதனை அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அடுத்த 6 மாதங்களுக்கான பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி ஜூன் 13ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஜூன் 28,29ம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உள்ளார். பின்னர், ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பிரான்ஸுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதனை தொடர்ந்து, செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷியாவுக்கும் 3வது வாரத்தில் நியூயார்க்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். மேலும் நவம்பர் 4ம் தேதி பாங்காக், 11ம் தேதி பிரேசிலும் மோடி செல்வது குறிப்பிடத்தக்கது.