20 பேரின் உயிரைக் காப்பாற்றிய ரியல் ஹீரோ!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பயிற்சி வகுப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர் தீ பற்றிய கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் வணிக வளாகம் உள்ளது. அந்த வணிக வளாகத்தில் உள்ள பயிற்சி வகுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அங்குஇ ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலர் தீயில் இருந்து தப்பிப்பதற்காக மாடியிலிருந்து கீழே குதித்துள்ளனர். இதனால், பல மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு ஏற்பட்ட தீ விபத்தின பார்த்த இளைஞர் ஒருவர் உடனடியாக அருகில் இருந்த ஏணியை பயன்படுத்தி மடியில் தத்தளித்துக்கொண்டிருந்த 20-மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் அங்கு திடீரென புகை வருதை பார்த்ததும் அங்கு என்ன நடக்கிறது எனக்கு புரியவில்லை, இருப்பினும் முதலில் அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை, அருகில் இருந்த ஏணியை பயன்படுத்தி வெளியேற்றினேன்” என கூறினார். அதன் பிறகே தீயணைப்பு வாகனம் வந்துள்ளது.