அமெரிக்காவில் உணவு இடைவெளியின் போது வெளியில் சென்று லாட்டரி வாங்கிய நபருக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக விழுந்துள்ளதால், அவர் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.
அமெரிக்காவின் நார்த் கரோலினாவைச் சேர்ந்தவர் James Belich. இவர் எப்போதும் உணவு இடைவெளிக்கு செல்லும் போது Charlotte-ல் இருக்கும் கடை ஒன்றில் லொட்டரி டிக்கெட் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் 30 டொலர் கொடுத்து வாங்கிய லாட்டரிக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக விழுந்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை NC Education Lottery அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதை முற்றிலும் எதிர்பார்க்காத அவர், சந்தோஷத்தில் இதைக் கேட்டு முற்றிலும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். அதன் பின் அந்த லாட்டரி டிக்கெட்டை தன்னுடைய முகத்தில் வைத்துக் கொண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் இந்த மகிழ்ச்சியை தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என் அம்மா தனி ஒருத்தியாக வளர்த்தார். இது என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று, இதைப் பற்றி முதலில் எங்கள் வீட்டில் கூறியவுடன் அனைவரும் அழுதுவிட்டனர்.
என்னுடைய குடும்பத்தினரின் முன்னேற்றத்திற்கு நிச்சயமாக உதவும், இது எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் தான் என்று கூறியுள்ளார்.