15 வயது கொலைகாரன்… பொலிசாரிடம் நடித்துக் காட்டிய கொடூரம்!

பிரித்தானியாவின் இளம்வயது கொலைகாரன் தாம் எவ்வாறு கொலை செய்தேன் என்பதை தத்ரூபமாக பொலிசாரிடம் நடித்துக் காட்டியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு, அப்போது 15 வயதேயான ஜேம்ஸ் பேர்வெதர், 5 பிள்ளைகளுக்கு தந்தையான ஜேம்ஸ் அட்ஃபீல்டு என்பவரை மிக கொடூரமாக கொலை செய்துள்ளார்.

மேலும் எசெக்ஸ் பல்கலைக்கழக மாணவர் நஹித் அல்மேனியா என்பவரையும் பேர்வெதர் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், பேர்வெதர் மேலும் பலரை கொலை செய்திருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பேர்வெதர் நடந்த சம்பவத்தை பொலிசாரிடம் நடித்துக் காட்டியுள்ளார்.

அதில், ஒரு குரல் தம்மிடம் பேசியதாகவும், உயிர்ப்பலிக்கு தயாராகவும், அல்லது நாங்களே வந்து பலியிடுவோம் என கூறியதாகவும் பேர்வெதர் தெரிவித்துள்ளார்.

அந்த குரலின் கட்டளையை தொடர்ந்து வெளியே சென்ற தமக்கு, ஒருவர் புல்வெளியில் படுத்திருப்பதை காண முடிந்தது எனவும், அவரே உனக்கான இரை என அந்த குரல் தம்மை வழி நடத்தியதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

போதை மயக்கத்தில் இருந்த அந்த நபரின் அருகாமையில் சென்று அவரது அடிவயிற்றில் கத்தியால் தாக்கியதாகவும், பின்னர் 102 முறை அவரது உடல் முழுவதும் கத்தியால் கொடூரமாக தாக்கியதாகவும் பேர்வெதர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் சவுதி அரேபிய மாணவர் நஹித் அல்மேனியா என்பவரை 16 முறை கத்தியால் தாக்கி கொலை செய்ததாகவும், பலி அளித்ததன் அடையாளமாக அவரது கண்களில் ஒன்றை வெளியே எடுத்ததாகவும் பேர்வெதர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நடந்த 11 மாதங்களுக்கு பின்னரே பொலிசாரின் தொடர் முயற்சிகளின் இறுதியில் பேர்வெதர் கைது செய்யப்பட்டார்.

பேர்வெதர் ஒரு மொபைல் விளையாட்டு பைத்தியம் எனவும், அவர் மொபைலில் விசித்திரமான பல விளையாட்டுகள் சேமிக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், கொலைகளை விசித்திரமாக செய்வது எப்படி என போன்ற ஆவணப்படங்களும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது பாதுகாப்பு மிகுந்த சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார்.