அடுத்ததாக முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் விரைவில் வருவார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து உரையாடினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், ” அகில இந்திய அளவில் நடந்து முடிந்தமக்களவை தேர்தலில் தி.மு.க. 3-வது இடத்தை பெற்று இருக்கிறது. இந்த தேர்தல் மூலம் தமிழக மக்கள் தலைமை ஆளுமை என்பதை நிரூபித்து இருக்கின்றனர். மக்கள் தி.மு.க. தமிழக நலன்களை காக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து இருக்கின்றனர்.
பாஜகவால் திராவிட கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. அடுத்ததாக முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் விரைவில் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும் தார்மீக உரிமையை தற்போது இழந்து இருக்கிறார்.
ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை தி.மு.க. கூட்டணியின் வெற்றி உணர்த்துகிறது. இதிலிருந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவது உறுதியாகிறது. மற்ற மாநிலத்தவர் கூட தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கண்டு வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
மேகதாது அணை, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான அணைத்து திட்டங்களையும் நிறைவேற்றாத வண்ணம் தி.மு.க. கூட்டணி தமிழகத்திற்கான அரணாக இருக்கும்.” என அவர் கூறியுள்ளார்.