பிரான்சின் லைன் நகரில் இடம்பெற்ற சூட்கேஸ் குண்டுவெடிப்பிற்கு காரணமான நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்களை பிரான்ஸ் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்
குண்டுவெடிப்பிற்கு முன்னதாக சந்தேகநபர் வெதுப்பகத்தின் முன்பாக பொதியொன்றை வைத்துவிட்டு செல்வது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட நபர் சைக்கிளில் அந்த பகுதிக்கு வருவதையும் சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.
சந்தேகநபர் ஐரோப்பிய அல்லது வடஅமெரிக்க பிரஜை என தெரிவித்துள்ள பொலிஸார் அந்த கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர்
அந்த நபர் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
பிரான்சின் லைன் நகரில் இடம்பெற்ற பார்சல் குண்டுவெடிப்பில்13 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சின் மூன்றாவது பெரிய நகரமான லயனில் மக்கள் அதிகமாக காணப்படும் வீதியொன்றில் வெதுப்பகத்திற்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது எட்டு வயது சிறுமி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நகரின் வரலாற்று பழமை வாய்ந்த விக்டர் கியுகோ வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாரிய சத்தமொன்று கேட்டது என அருகில் உள்ள ஹோட்டலொன்றின் வரவேற்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பதற்றமடைற்து ஓடுவதையும் பல அலறல்களையும் கேட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.